Friday, April 20, 2012

கறுப்புக் கோட் வெள்ளை மனசு


கேள்விகளும், ஆச்சர்யங்களும்
 அந்த ரயில், புட்டபர்த்தி  நிலையத்தில் இருந்து சென்னை கிளம்பி விட்டிருந்தது.  சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையத்தில் சேவை செய்துவிட்டு திரும்பிய ‘சாயி பக்தர்கள்’ சிலர், அந்த ரயிலில் அமர்ந்திருந்தார்கள். அது ரிசர்வேஷன் பெட்டி. பயணிகளின் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்துக் கொண்டிருந்தார் இளம் வயது டிக்கெட் பரிசோதகர் ஒருவர். கறுப்பு கோட் அணிந்து மிடுக்காகத் தெரிந்தார்.

சாயி பக்தர்களின் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார். அடுத்தது அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்த 3 இளைஞர்கள். எல்லாரும் கல்லுõரி மாணவர்கள் போன்ற  தோற்றத்தில் இருந்தார்கள். அவர்களின் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார் டிக்கெட் பரிசோதகர். அந்த மூவரும் வைத்திருந்தது முன்பதிவு செய்யப்படாத (ஓபன்) டிக்கெட். அதைப் பார்த்ததும் அவர் முகம் மாறியது.
‘சாரி, நீங்கள் இங்கு அமரக்கூடாது. அன்ரிசர்வ்டு பெட்டிக்கு போங்கள் அல்லது கூடுதல் கட்டணம் செலுத்துங்கள்’ என்றார்.
அந்த 3 இளைஞர்களும் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை. அடுத்து டிக்கெட் பரிசோதகரை சரிக்கட்டும் முயற்சியில் இறங்கினர்.
‘சார், ரசீது போடாதீங்க. உங்களுக்கு எவ்வளவு வேணும் வாங்கிக்கிங்க’ என்றார் ஒருவர்.
அதைக் கேட்டதும், ‘கறுப்புக்கோட்’ அணிந்திருந்த டிக்கெட் பரிசோதகர் முகத்தில் புன்னகை ததும்பியது...
‘நோ, நோ. ஐ எம் டிபரன்ட் பெர்சன். நீங்க நினைக்கும் நபர் நான் அல்ல. உரிய கட்டணம் கொடுங்க அல்லது அடுத்த ஸ்டேஷனில் இறங்கி ‘பொதுப் பெட்டி’யில ஏறிக்கங்க’ எனக் கறாராக பேசினார்.
‘ஓபன் டிக்கெட்’ பயணிகள், வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தினார்கள்.
இத்தனையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சாயி பக்தர்கள், ரசீது கொடுத்துவிட்டு நகர்ந்த டிக்கெட் பரிசோதகரின் கைகளை பற்றிக்கொண்டனர்.
கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்க, அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
‘சார், உங்க நேர்மையை பாராட்டுகிறோம். உங்கள மாதிரி நல்லவங்களால்தான் நாட்டுல மழை பெய்யறது’ என்று பரவசமடைந்தனர். அதில் ஒருவர் வெள்ளை பேப்பர் உருவி எடுத்தார். ‘கடகட’வென பாராட்டு மடல் எழுதினார். அனைவரும் கையெழுத்து இட,  நேர்மையான டிக்கெட் பரிசோதகருக்கு ஓடும் ரயிலிலேயே அந்த நொடியே பாராட்டுச் சான்று கொடு-க்க கைத்தட்டலால் அந்தப் பெட்டியே அதிர்ந்தது.
‘உரிய டிக்கெட் வாங்காம, படிச்சவங்க, அரசியல்வாதிங்க, அதிகாரம் மிக்கவங்கனு பலரும் ரயில்வேயை இப்படி ஏமாத்துறாங்க. மன நிம்மதியுடன் இந்த பணியை என்னால் தொடர முடியவில்லை. வேலையை விட்டுவிடலாமானு யோசிக்கிறேன்’ என தனது மனச்
சுமையை சாயி பக்தர்களிடம் இறக்கி வைத்தார் டிக்கெட் பரிசோதகர்.
‘பாக்கெட்டை நிரப்பும்’ நோக்கத்திலேயே பலரும் அரசு பணியில் சேரும் நிலையில், நேர்மையாக பணியாற்றி, ‘அரசுக்கு வருமானம் பார்க்கணும்’ னு  நினைக்கும் இதுபோன்ற உண்மை ஊழியர்களை பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அன்புடன் சேது

9 comments:

  1. DEAR SETHU, MYSELF AND MY FAMILY DEEPLY APPRECIATE YOUR EFFORTS ON HIGHLIGHTING THE HONEST PEOPLE WHICH HAS BECOME A RARITY. INSTEAD OF PROJECTING ALL THE BAD , UGLY AND THE WORST ASPECTS OF THE SOCIETY , YOUR SECTION HAS STARTED ON A POSITIVE DIRECTION. HATS OFF TO YOU AND DINAMALAR. ANBUDAN SREENY AND LAKSHMI FROM NEWJERSEY

    ReplyDelete
    Replies
    1. அன்பு நெஞ்சத்தீர்!
      என் எழுத்துக்களை படியுங்கள் என்று அடிக்கடி உங்களை எல்லாம் தொந்தரவு செய்கிறேனோ என்று தோன்றும்.
      என் மீது பாசம் கொண்டு, கருத்துக்கள் சொன்னதற்கு மிக்க நன்றி. இன்னும் எழுதுவேன். கடலின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் titanic போல, என் மனதின் ஆழத்தில் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கும் எண்ணங்களை, அனுபவங்களை சொல்லுவேன்.
      தொந்தரவிற்கு மன்னிக்கவும்.வாரம் . சில நிமிடங்கள் எனக்காக ஒதுக்கவும். நன்றி.அன்புடன் சேது

      Delete
  2. அன்புள்ள நண்பா
    இன்றைய இளைஞர்களின் நாட்டு பற்று இதுதான் .சுயநலமிக்க மனிதர்கள் இவர்கள் .தவறை செய்யும்போது பயமோ
    குற்ற உணர்ச்சியோ சிறிதும் இல்லாத "இவைகள்" இந்தியாவைத்தவிர வேறு எந்த நாட்டிலும் வாழ முடியாது.
    தோலுரியுங்கள் இந்த ஈன பிறவிகளை , வரும் வாரங்களில் வாழ்க வளர்க - நட்புடன் டாக்டர் மனோகரன் .

    ReplyDelete
    Replies
    1. அன்பு நெஞ்சத்தீர்!
      என் எழுத்துக்களை படியுங்கள் என்று அடிக்கடி உங்களை எல்லாம் தொந்தரவு செய்கிறேனோ என்று தோன்றும்.
      என் மீது பாசம் கொண்டு, கருத்துக்கள் சொன்னதற்கு மிக்க நன்றி. இன்னும் எழுதுவேன். கடலின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் titanic போல, என் மனதின் ஆழத்தில் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கும் எண்ணங்களை, அனுபவங்களை சொல்லுவேன்.
      தொந்தரவிற்கு மன்னிக்கவும்.வாரம் . சில நிமிடங்கள் எனக்காக ஒதுக்கவும். நன்றி.அன்புடன் சேது

      Delete
  3. Dear Sethu
    Nice to know that you are back to writing with a bang. Good to see you in varamalar. I wish you should write more about the world. Nice article to start with.
    Regards,
    Sethuraman Sathappan
    Mumbai

    ReplyDelete
    Replies
    1. அன்பு நெஞ்சத்தீர்!
      என் எழுத்துக்களை படியுங்கள் என்று அடிக்கடி உங்களை எல்லாம் தொந்தரவு செய்கிறேனோ என்று தோன்றும்.
      என் மீது பாசம் கொண்டு, கருத்துக்கள் சொன்னதற்கு மிக்க நன்றி. இன்னும் எழுதுவேன். கடலின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் titanic போல, என் மனதின் ஆழத்தில் இன்னும் உயிர்த்துடிப்போடு இருக்கும் எண்ணங்களை, அனுபவங்களை சொல்லுவேன்.
      தொந்தரவிற்கு மன்னிக்கவும்.வாரம் . சில நிமிடங்கள் எனக்காக ஒதுக்கவும். நன்றி.அன்புடன் சேது

      Delete
  4. கோமல் அன்பரசன்April 20, 2012 at 10:58 PM

    நெஞ்சினிய நண்பரே ! மீண்டும் நீங்கள் எழுதத் தொடங்கியிருபபது மகிழ்ச்சி அளிக்கிறது.இன்னும்..இன்னும்.. நல்லனவெல்லாம் தங்களால் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    ReplyDelete
  5. கருப்பு கோட், வெள்ளை மனது-எழுத்துக்களுக்கு பாராட்டு!!!
    நேர்மையான டிக்கட் பரிசோதகரின் நேர்மைக்கு ரயிலிலேயே பயணிகள் நடத்திய பாராட்டு விழா நிகழ்ச்சி உண்மையிலேயே வியத்தகு விஷயம் தான். அவருக்குக் கிடைத்த அந்தப் பாராட்டு அவர் வாழ்நாளிலேயே கிடைத்திருக்காத பாராட்டாகவே இருக்கும் என்பது என் கருத்து. அவருடைய மன எனர்ஜி பாட்டரியை அப்பாராட்டு சார்ஜ் செய்திருக்கும். அவர் இன்னும் உயிர்ப்ப்போடு செயல்பட அது பேருதவி செய்யும். எந்த ஒரு செயலுக்கும் ஒரு சிறிய அங்கீகாரம் கிடைத்தால் தான் மென்மேலும் சிறப்பாக செயல்பட உந்துதல் கிடைக்கும். பிரயாணத்தின் போது, ஊர் பெயர் தெரியாத ஒரு குழந்தையின் கன்னத்தை செல்லமாகத் தட்டிக் கொடுக்கும் போது அக்குழந்தை வெள்ளையாய் சிரித்தால்(நம் அன்பிற்கு அங்கீகாரம் கொடுத்து), நமக்கு எப்படி ஒரு இனம் புரியாத சந்தோஷம் கிடைக்கிறதோ, அதுபோல தான் நீங்கள் சந்தித்த டிக்கட் பரிசோதகரின் நேர்மைக்கு பிரயாணிகள் கொடுத்த உடனடி பாராட்டு விழா! அவர் மனமும் குளிர்ந்திருக்கும். இந்த கட்டுரையை அழகான தமிழில், எளிமையான நடையில் எழுதிய உங்களுக்கும், நீங்கள் சந்தித்த நேர்மையான அதிகாரிக்கும், பாராட்டு விழா நடத்திய ரயில் பிரயாணிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    -காம்கேர் கே. புவனேஸ்வரி, சென்னை

    ReplyDelete
  6. dear sethu
    now i am in puttaparthy
    i go thru ur writeup
    verynice and difrent angle u r started
    keepit up
    congrats

    ReplyDelete

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.