அன்புள்ளங்கள்

தவத்திரு முனைவர் ஸ்ரீ ஜெகன்னாத சுவாமி

சேது நாகராஜன் அவர்களை எனக்குக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நன்கு தெரியும்.

அனுபவங்கள் அவரை ஒரு சிறந்த மனித நேயப் பண்பாளராக உருவாகி வருவதைக் கண்டு வியக்கின்றேன்.

வாழ்வியல் விழுமியங்கள் சேதுவுக்கு இயல்பாக அமைந்திருப்பது அவர் பெற்றோர் செய்த தவப் பயன் என்று நினைக்கிறேன். தன்னைப் பொறுத்தவரை மிகச்சரியாக் கடமை ஆற்றுவது அவரது பலம்.

எதிலுமே முழுமைத் தன்மையை எதிர்பார்ப்பது அவரது பலவீனம் என்று நான் நினைப்பது உண்டு.

எனக்கு சேது மீது மிகவும் பாசம் ஏற்படக் காரணம், எந்த நட்பையும், உறவையும் அவர் எக்காலத்தும் எந்தவிதமான பிரதிபலனும் கருதாமல் உன்னதமாக மதித்துப்போற்றி மகிழ்வதுதான்.

அவருக்கு இந்தச் சமுதாயத்தின்மீது நிறைய கோபம் உண்டு. ஆனாலும், எப்போதும் எல்லோரிடமும் அன்பு செய்யும் மனமும் படைத்தவர் அவர்.

நிறைய திறமைகளைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ள அவருக்கு வருங்காலம் நிறைய வாய்ப்புகளையும், வெற்றிகளையும் அளிக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

தவத்திரு முனைவர் ஸ்ரீ ஜெகன்னாத சுவாமி.
ஸ்ரீ லலிதாம்பிகை பீடம்
கோவை.




புலவர் மகாதேவன், தினமலர் - ஆன்மிக மலர்

இதழியல் துறையில் இணையிலாப் புலவர்.
புதுப்புதுப் பணித்திட்டங்கள் மலரும் சோலை.
பொறுமையில் பூமி.
உழைப்பில் தேனி.
[தின]மலரின் மணத்துக்கு மணம் சேர்க்கும் மாண்பாளர்.
சிரித்த முகத்துச் சிந்தனையாளர் - திரு சேது நாகராஜன்.

-புலவர் வே. மகாதேவன்
 தினமலர் - ஆன்மிக மலர்
 சென்னை - 600 008