
ஒரு வாழ்க்கை... சில வார்த்தை!
1967 பிப்ரவரி 27
இப்போது, என் வயதை கணித்திருப்பீர்கள்!
எதிர்பாராத நண்பர்களிடம் இருந்தும், எதிர்பார்த்து காத்திருந்த நண்பர்களிடம் இருந்தும் வாழ்த்து அழைப்புகள். வாட்ஸ் அப் தகவல்கள்.
என் மகளும், மகனும் மலர் கொத்து வழங்கி வாழ்த்தினார்கள்.
கைகுலுக்கல்களும், வாழ்த்துக்களும் மட்டுமல்லாமல், இந்த பிறந்த நாள், எனது வாழ்க்கை பயணத்தின் முக்கிய திருப்பங்களை தரும் என்ற எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் எனக்குள் மலரச் செய்திரு க்கிறது.
எங்கே? யார் வயிற்றில் நாம் பிறக்கிறோம் என்பது யாரும் அறிய முடியாத பிரபஞ்ச சூட்சுமம். என் பிறவி, தவப்பயன் என்றே நான் பெருமிதம் கொள்கிறேன்.
வெறும் பத்துக்கு பத்து அளவிலான அறைதான் ஆரம்ப கால வசிப் பிடம். அதற்குள் 4 சகோதரிகள், அப்பா-அம்மாவுடன் நான்.
வசிக்கும் தெருவிலேயே 8ம் வகுப்பு வரை படிப்பு. சேதுபதி மேல் நிலை பள்ளியில் 9ம் வகுப்பு சேரும்போதுதான் அடுத்த தெருவே எனக்கு அறிமுகமானது. கல்லுõரி படிப்புக்காக, காரியாபட்டி பஸ்களில் பயணித்தபோதுதான் மதுரை நகரம் அறிமுகமானது.
அதுவரை பாட புத்தகங்களில் தவிர, அறிவியல், வரலாறு, அரசியல் அறியாதவன். இவை அனைத்தும், பணியில் சேர்ந்ததும் நான் கற்றுக் கொண்ட இடம் தினமலர்.
‘ஒரே பையன்’ என்ற செல்லத்தால், அக்கா-தங்கைகள்கூட அறிய õமல் தனி கவனிப்பாக ‘பன்’ பார்சல் என் கையில் சேர்ப்பார் அப்பா. நரசுஸ் கவரில் காபி மணக்க வரும் அந்த ‘பன்’ ருசித்த வாசம் இன்னும் என் நினைவில்.
இப்போதும் சிலர், ‘பிழைக்கத் தெரியாதவனா இருக்கீயே. வாங்குற சம்பளத்தை அப்படியே வீட்டு கடனுக்கு கொடுத்திடு. மிச்சம் இரு க்கிற காசில குடும்பம் நடத்து. அப்பா-அம்மாவ முதியோர் இல்லத்திலவிட வேண்டியதுதான’ என்று சொல் அம்புகளால் என்னை தைப்பார்கள்.
இன்னும் பலர், ‘அம்மா-அப்பாவை வச்சு காப்பாத்துறீங்களே. அதாங்க புண்ணியம்’ என்பார்கள்.
புண்ணியம் என்று ஒன்று ‘என் கணக்கில்’ சேர்ந்தால், அதை செலவிடும் அளவுக்கு நமக்கு ஆயுள் இருக்குமா தெரியாது. ஆனால், என் மனம் நினைத்தது இதைதான்...
‘தன் வயிறு நிரம்பாவிட்டாலும், குழந்தைகள் பசியால் வாடிவிடக்கூடாது என கவனமாய் எங்கள் கரம்பிடித்து, வாழ்க்கை பயணத்தில், இத்தனை துõரம் நம்பிக்கையோடு அழைத்து வந்த என் பெற்றோருக்கு நான் செலுத்தும் ஒரு சிறு நன்றிக் ‘கடன்’, அவர்கள் என்னுடனே வசிப்பதும், வாழ்வதும். அதுவும் இந்த பிறவியிலேயே எனக்கு வாய்த்திருப்பது மிகவும் சிறப்பு என கருதுகிறேன்.
...
அது 1988ம் ஆண்டு. கல்லுõரி படிப்பு முடித்த கையுடன், அமரர் டிவிஆர் பிறந்த நாளில்தான் தினமலரில் பணி தொடங்கினேன்.
‘ஒரு பத்திரிகையாளன், பொது இடங்களில் எப்படி அணுக ÷ வண்டும்?. பல்கலைக்கழகங்கள்கூட சொல்லித் தராத அத்தனை வாழ்வியல் ஒழுக்கங்களையும் அன்றாட சந்திப்புகளில் திரு. சுரேஷ் - திரு. மகேஷ் அவர்களிடம் இருந்து அந்த நாட்களில் கற்றுக் கொண்டேன்.
90 களில், ‘நட்சத்திரங்கள்’ என்ற எனது முதல் கவிதை கிறுக்கலை அங்கீகரித்து ஊக்கப்படுத்தி வாரமலரில் திரு. ரமேஷ் சார் அவர்கள் அச்சேற்றினார்கள். எனக்கும் எழுத வரும் என்பதை உணர வைத்த ஆசான் அவர்.
கோவையில் எனக்கு 7 ஆண்டுகள் முழு சுதந்திரம் கொடுத்தார் ஸ்ரீ மகேஷ் அவர்கள். அதனால்தான், விஜயகுமார், செல்வக்குமார், விஜில்குமார், யோகா, கோவிந்தராஜ், அய்யாசாமி, மார்க்கபந்து, விஜயராஜ், விஸ்வநாத், பிரபாகரன், முரளி, உமாபதி, சிவசரவணன் போன்றோரை அடையாளம் கண்டு அன்பான ஆற்றல்மிக்க குழுவை உருவாக்க முடிந்தது.
இன்னும், சுதர்சன், ஐயப்பன், புண்ணியமூர்த்தி, திரு.வரதன், தி ரு.மணி என அன்பு வட்டம் எப்போதுமே எனக்கு ஆதரவாய் அமைந்தது.
பசிக்கும்போது மட்டுமே உணவின் நினைவு வரும். விழிகள் ÷ சார்வடையும்போது மட்டுமே உறங்கச் செல்வேன்.
அப்போதெல்லாம் பாண்டிச்சேரி தினமலரில் ஏதாவது விழா என்றால் முதல் ஆளாய் போக ஆசைப்படுவோம். திரு.வெங்கடேஷ் அவர்கள் அலுவலகத்தின் உபசரிப்பு அப்படி.
மதுரையில் இருந்த காலங்களில் திரு. பாலாஜி சார் அவர்களுடன் பேச, அருகில் நிற்க ஆசைப்படுவோம். ‘யாரை எதிர்கொண்டாலும் அன்பான விசாரணை. சாப்பிடச் சொல்லும் பாங்கு’ எல்லாரையும் கட்டிப்போட்டது.
சென்னையில் கால் பதித்த நாள் முதல், கருத்து சுதந்திரத்துக்கும், எழுத்து சுதந்திரத்துக்கும் சுதந்திரமாய் வழி கொடுத்தவர் திரு. ÷ காபால்ஜி அவர்கள். எந்த பிரச்னை வந்தாலும், ஊழியர்களை பாதுகாக்கும் அவரின் நெஞ்சுரம் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை.
..
அக்கவுண்டன்ட் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டு, ‘புரூப் ரீடர்’ பணிக்கு தேர்வானவன் நான். அதன்பின் நிருபர், தொடர்ந்து உதவி ஆசிரியர், அப்புறம் செய்திப் பிரிவு பொறுப்பாளர் என பல முகங்கள். கோவையில் வீடு வீடாகப்போய் வேறு இதழ் வாசகரை சந்தித்து ஏன் தினமலர் படிப்பதில்லை என்று சர்வே எடுப்பது முதல் திருப்பூர் ஏஜன்ட்டை அழைத்துக் கொண்டு ஏற்றுமதி நிறுவனங்களில் ஏறி, இறங்கி உங்களுக்கு தினமலரில் கூடுதல் தகவல் என்ன சேர்க்க வேண்டும் என்று கேட்டுகேட்டு செய்தி வெளியிட்ட காலங்கள் அவை.
தினமலரில் நான் கால் பதித்த காலத்தில் எனக்கு கிடைத்தது பாசமிகு உறவுகள். திரு.பார்த்திபன், திரு. திருமலை, திரு. முருகராஜ், திரு. கந்தவேல், திரு. குமரன், திரு. காளிதாஸ், திரு. முருகன் அதன்பின் திரு. ராமன், திரு. பாஸ்கர், திரு. கபிலன் அவர்கள் (சிலர் பெயர்கள் விடுபட்டிருக்கலாம்...) என என்னை சுற்றி இருந்த இந்த அத்தனை வைரங்களும் என்னை நானே பட்டை தீட்டிக்கொள்ள உதவின.
சென்னையில் திரு. கதிர் சாருடன் பணியாற்றிய சில மாதங்கள் மறக்க முடியாதவை. குடும்பத்துடன் சென்னை வந்த சவாலான நாட்களில், திரு.இரா. குமார் சாரும், திரு. சீனிவாசனும் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து வீட்டில் கொண்டு விட்டனர். சரவண பவனில் தினமும் காபி சந்திப்புகள். எந்த தகவலையும் தனது நினைவாற்றலில் இருந்து அபாரமாக சொல்லும் பாங்கு என திரு. இரா. குமார் வித்தி யாசமான மனிதர்.
‘சீனியர்-ஜூனியர்’ பாகுபாடு இல்லாமல் அவர்கள் என்னிடம் பழகிய அந்த நாட்கள் இன்னமும் நெஞ்சில் ஈரம் வார்க்கும்.
நிருபராக மதுரையில் சுற்றிக் கொண்டிருந்த நான் 1993ல் கோவை பதிப்பு பொறுப்புக்கு அனுப்பப்பட்டேன். இடையில் ‘சேலம் துரத்த’, அதன்பின் 2000ல் சென்னை வந்தேன். இப்படியே ‘விளைய õட்டாக’... 25 ஆண்டுகள் தினமலரில் நிறைவு செய்து விட்டேன்.
இன்னமும் பஸ், ரயில்களில் ஜன்னலோரம் அமர்ந்து பின்னோக்கி ஓடும் மரங்களை ரசிக்கும் குழந்தை மனமும், வெளியில் எங்கு சென்றாலும், ‘சட்டையின் முதல் பொத்தனை போட்டு கொண்டிரு க்கிறோமா?’ என உறுதி செய்து கொள்ளும் ஒழுக்கமும், தினமலரில் பணியில் சேர்ந்த அதே முதல் நாள் புத்துணர்வும் இன்றைக்கும் ஏற்படுகிறது.
அக்கா-தங்கைகளின் அன்பை பெற்றதும், அம்மா-அப்பாவுடன் தினமும் உணவு உண்பதும், மனைவி, குழந்தைகளை நேசிப்பது தவிர வேறு எதையும் பெரிதாக நினைக்கவில்லை. எனது மகள் ஜெ யரூபினியும், மகன் முகில் கார்த்திக்கும்தான் எனக்கு புதுப்புது உலகத்தை அறிமுகம் செய்தார்கள். அவர்களின் ஆர்வமிகு ÷ கள்விகள்தான் மறுபடி, மறுபடி குழந்தை பருவத்துக்கு என்னை அழைத்துச் செல்கிறது.
உணர்வுகள் துளிர்க்கும் இந்த நன்நாளில், எனது இத்தனை துõர வாழ்க்கை பயணத்தில், நான் ‘குருவாக’ மதிக்கும் கோவை ஸ்ரீ ஜெகநாத சுவாமிகள், 4 ஆண்டுகளுக்கு முன் என்னைப் பற்றி எனது ‘பிளாக்’கில் தெரிவித்த கருத்துக்கள்தான், என்னைப்பற்றிய முழு மதிப்பீடு என்று கருதுகிறேன். அவரின் அந்த வைர வார்த்தைகள் இ தோ:
‘...சேது நாகராஜன் அவர்களை எனக்குக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நன்கு தெரியும்.
அனுபவங்கள் அவரை ஒரு சிறந்த மனித நேயப் பண்பாளராக உ ருவாகி வருவதைக் கண்டு வியக்கின்றேன்.
வாழ்வியல் விழுமியங்கள் சேதுவுக்கு இயல்பாக அமைந்திருப்பது அவர் பெற்றோர் செய்த தவப் பயன் என்று நினைக்கிறேன். தன்னைப் பொறுத்தவரை மிகச்சரியாக் கடமை ஆற்றுவது அவரது பலம்.
எதிலுமே முழுமைத் தன்மையை எதிர்பார்ப்பது அவரது பலவீனம் என்று நான் நினைப்பது உண்டு.
எனக்கு சேது மீது மிகவும் பாசம் ஏற்படக் காரணம், எந்த நட்பையும், உறவையும் அவர் எக்காலத்தும் எந்தவிதமான பிரதிபலனும் கரு தாமல் உன்னதமாக மதித்துப்போற்றி மகிழ்வதுதான்.
அவருக்கு இந்தச் சமுதாயத்தின்மீது நிறைய கோபம் உண்டு. ஆனாலும், எப்போதும் எல்லோரிடமும் அன்பு செய்யும் மனமும் படைத்தவர் அவர்.
நிறைய திறமைகளைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ள அவருக்கு வருங்காலம் நிறைய வாய்ப்புகளையும், வெற்றிகளையும் அளிக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்...’
- அன்புடன் சேது
உங்களுடன் பணியாற்ற கிடைத்த வாய்ப்பு என் வாழ்வில் கிடைத்த பாக்யம்.... உங்கள் கீழ் பணியாற்றுபவர்களை திறன் அறிந்து ஊக்குவித்து வளர்த்தும் <உங்கள் <உன்னத பண்பினால் பலனடைந்தவர்களில் நானும் ஒருவன். பத்திரிக்கையாளர்களில் முன்னுதாரணமானவர் நீங்கள். நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteரா.வேலுச்சாமி, கோவை
மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா, தங்கள் நினைவுகளால் நான் தன்யனானேன்!
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது, என் வலைப்பக்கங்களை கொஞ்சம் பார்வையிடுங்கள் ஐயா!
https://aarumugamayyasamy.wordpress.com
https://aarumugamayyasamy.blogspot.com
http://kinarumulagamum.blogspot.in/