Sunday, December 23, 2012

அன்புள்ளங்களுக்கு நன்றி 

என்னிடம் நான் விரும்பாத குணம்  சினம்.
என் உடன் பிறந்தது போல எப்போதும் எனக்குள் கனன்று கொண்டு இருக்கிறது.
எப்போது எழும். எப்போது விழும் என தெரியாது.
சினம் தணிந்து , சிந்தை தெளிய எனக்குள் மன போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது.

ஷீரடி சாய் பாபாவை முதன்முதல் நண்பர் வீடு பூஜை அறையில் வைத்து தரிசித்தேன்
அதன்பின் பாபா பற்றிய நூல் வெளியிடும் பணியில் ஈடுபட்டேன்.
பொறுமை... நம்பிக்கை... என்ற பாபாவின் அருள் வார்த்தைகள் எனக்குள் அமைதி தவழ செய்தது.

பாபாவின் முகம் பார்த்தது முதல், எனக்கு சொந்த வீடு , எனது பொருளாதாரம் பற்றிய சுமை நீங்கி மனம் லேசானது.

நல்ல நண்பர்கள், அன்பான உறவினர்கள், பாசமுள்ள குடும்பத்தினர் எனக்கு கிடைத்து இருகின்றனர்...

வீடும் , வசதியும் எப்போது கிடைக்க வேண்டும் என்பது பாபா வசம்.

அமைதியற்ற மனம், ஆழ்ந்த சிந்தனை தருவதில்லை.

நமது இல்லத்தில் அமைதி தவழவும். நல்ல எண்ணங்கள் பரவவும் சாய் பஜன் நடத்தலாம் என்று நினைத்தேன் .

அதற்கான வழி காட்டினார் பாபா.

என் வீடு இருக்கும் மாம்பலத்திலேயே மங்களம் என்ற மாமி அறிமுகம் ஆனார்.
அவருடன் சில பெண்கள் இணைந்தனர்.
16.16.2012 ஞாயிறு அன்று என் இல்லத்தில் சாய் பஜன் நடந்தது.
எங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் ஆனந்த அலைகள் பரவியது.

புற்று நோயால் உயிருக்கு போராடும் என் நண்பர் மனைவி நலம் பெற வேண்டுதலோடு , பஜன் முடித்தோம்.
அனைவரும் அன்புருக பாபாவை பாடினார்கள்.
அன்புள்ளங்களுக்கு நன்றி 



  


















 

Thursday, December 6, 2012

16-12-2012, ஞாயிறு
மாலை 6.01